சேலத்தில் மீன் கடைக்காரர் மீது தாக்குதல் !

முன்விரோதம் காரணமாக சேலத்தில் மீன் கடைக்காரர் மீது தாக்குதல் நடத்திய 2 பேர் மீது சேலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-04-06 08:30 GMT

 தகராறு

சேலம் மாவட்டம் வேடுகாத்தாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மேகலா. இவருடைய மகன் ஞானசேகரன். கருப்பூர் பகுதியை சேர்ந்தவர் சாமிநாதன். இவர்கள் சிவதாபுரம் பகுதியில் மீன் கடை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்களுக்குள் பணம் கொடுக்கல், வாங்கலில் முன்விரோதம் இருந்து வந்தது. நேற்று முன்தினம் மேகலா, ஞானசேகரன் இருவரும், சாமிநாதன் மீன் கடைக்கு சென்று பணம் கேட்டு உள்ளனர். அப்போது அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த தாய், மகன் இருவரும் சேர்ந்து சாமிநாதனை தாக்கி உள்ளனர். இதில் காயம் அடைந்த அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில்மேகலா, ஞானசேகரன் ஆகிய 2 பேர் மீது சேலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News