பொதுமக்கள் மீது தாக்குதல் - பூலாம்பாடியில் சாலை மறியல்

பூலாம்பாடி பேரூராட்சியில்,பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பாதையை மறித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2024-03-05 01:38 GMT

பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடியில் உள்ள அரசடிக்காடு பகுதியில் குடியிருப்பவர்கள் பயன்படுத்திவந்தசாலையை தனிநபர் ஒருவர் சாலை போட விடாமல் மறிப்பதாகவும் இதனை கேட்பவர்களை தரக்குறைவாக பேசி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர் இதனால் பாதிக்கப்பட்டவர்கள் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், இதனை அறிந்த, அரசடிகாடு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அரும்பாவூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.

இதற்கு போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், மார்ச் 4ஆம் தேதி அரசடிக்காடு பகுதியைச் சேர்ந்த கிராம பொதுமக்கள் பூலாம்பாடி பேரூராட்சி பேருந்து நிலையத்தில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து அவர்கள் தெரிவிக்கும் போது கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தி வந்த புது பாதையை தற்போது ஒருவர் தனக்கு சொந்தமானது என்று தெரிவித்து பாதையை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளார் இதனால் விவசாயப் பொருட்கள் பள்ளி மாணவ மாணவிகள் பெரியவர்கள் சென்று வர முடியாமல் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமம் அடைவதாகவும் இதற்கு பூலாம்பாடி , பேரூராட்சி துணை தலைவர் செல்வலட்சுமி சேகர் தூண்டுதல் இருப்பதால் , தனிநபர் ஒருவர் பாதி ஆக்கிரமிப்பு செய்து கேட்பவர்கள் மீது வழக்கு தொடர்ந்து, பிரச்சனை செய்து வருகிறார்.

எனவே ஆக்கிரமிப்பு பாதையை அகற்ற கோரி, சாலை மறியலில் ஈடுபடுவதாகவும் இதற்கு தீர்வு கிடைக்கும் வரை தாங்கள் சாலை மரியலை விடப்போவதில்லை என்று தெரிவித்துள்ளனர் தெரிவித்துள்ளனர். மேலும் சம்பவ இடத்திற்கு வந்த பெரம்பலூர் சரக துணை காவல் கண்காணிப்பாளர் பழனிச்சாமி மற்றும் குற்ற பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் தங்கவேல் மற்றும் காவலர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் தொடர்ந்து 5 மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல் நடந்ததால்  போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News