விடாமுயற்சியுடன் லட்சியத்தை அடைய வேண்டும் : சோ. தர்மன் பேச்சு!

மாணவர்கள் நேர மேலாண்மையை கடைப்பிடித்து விடாமுயற்சியுடன் விரும்பிய துறைகளில் கவனம் செலுத்த வேண்டும். இலக்கியம் மாணவர்களுக்கு தன்னம்பிக்கையும் நல் ஒழுக்கத்தையும் கொடுத்து வழிகாட்டியாக இருக்கிறது என எழுத்தாளர் சோ.தர்மன் தெரிவித்தார்.;

Update: 2024-05-28 05:17 GMT

எழுத்தாளர் சோ.தர்மன்

தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு மேல்நிலைப்பள்ளி உயர்கல்வி வழிகாட்டுதல் குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் தூத்துக்குடி கிரேஸ் பொறியியல் கல்லூரியில் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர்கள் குருநாதன், ஜெயபிரகாஷ் ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி திட்ட அலுவலர் முனியசாமி அனைவரையும் வரவேற்றார்.

இந்நிகழ்ச்சியில் சாகித்ய அகாடமி விருதாளர் சோ.தருமன் கலந்து கொண்டு பேசியதாவது: உயர் கல்வி வழிகாட்டுதல் கூட்டத்தில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பாடங்களை தேர்வு செய்து கடும் முயற்சியுடன் லட்சியத்தை அடைய வேண்டும். மாணவர்கள் நேர மேலாண்மையை கடைப்பிடித்து விடாமுயற்சியுடன் விரும்பிய துறைகளில் கவனம் செலுத்த வேண்டும். இலக்கியம் மாணவர்களுக்கு தன்னம்பிக்கையும் நல் ஒழுக்கத்தையும் கொடுத்து வழிகாட்டியாக இருக்கிறது.மாணவர்களை நுண்கலைகளான சங்கீதம், ஓவியம், சிற்பம், விளையாட்டு, இலக்கியம், ஆகியவற்றில் ஈடுபடுத்தி திறமைகளை வெளிப்படுத்த வேண்டும்.நவீன தொழில்நுட்பத்தை மாணவர்கள் நல் முறையில் பயன்படுத்திட வேண்டும்.இவ்வாறு பேசினார்.

இதில் கிரேஸ் கல்வி குழுமத்தின் தலைவர் ஜோசுவா,பொறியியல் கல்லூரி முதல்வர் ரிச்சர்ட் .திறன் மேம்பாட்டு கழக உதவி இயக்குனர் ஏஞ்சல் விஜய நிர்மலா உள்பட 500க்கும் மேற்பட்ட பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், தலைமையாசிரியர்கள் கலந்து கொண்டனர். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி ஒருங்கிணைப்பாளர் சுடலைமணி நன்றி கூறினார். முன்னதாக பணி நிறைவு பெற்ற தலைமையாசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கி பாராட்டப்பட்டது, பல்வேறு பள்ளிகளில் சிறந்த மாணவர்களுக்கு காமராஜர் விருதுடன் பத்தாயிரம் ரூபாய்க்கான காசோலையும் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News