மருந்தக உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்

மருந்தக உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-04-04 04:47 GMT

 விழிப்புணர்வு 

கள்ளக்குறிச்சியில் மெடிக்கல் கடை உரிமையாளர்கள் மற்றும் கூரியர் ஏஜென்சி ஊழியர்களுக்கு ஆலோசனை கூட்டம் நடந்தது. கள்ளக்குறிச்சி போலீஸ்ஸ்டேஷனில் நடந்த விழிப்புணர்வு கூட்டத்திற்கு, இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமை தாங்கினார். சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் முன்னிலை வகித்தார். வாலிபர்கள் , கல்லுாரி மாணவர்கள் போதை மற்றும் வலி நிவாரணி மாத்திரைகளை உட்கொள்வதாக புகார் எழுந்தையடுத்து, கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள மெடிக்கல் கடை உரிமையாளர்கள் மற்றும் கூரியர் ஏஜென்சி ஊழியர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இதில், டாக்டர்கள் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்துகள் கொடுக்கக்கூடாது. குறிப்பாக, போதை தரக்கூடிய வகையிலான இருமல் மருந்து, துாக்கம் மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்யக்கூடாது, அவ்வாறு விற்பனை செய்வதாக புகார் பெறப்பட்டால், உரிய விசாரணை செய்து சம்மந்தப்பட்ட மெடிக்கல் கடைக்கு சீல் வைக்கப்படும். அதேபோல், கூரியர் நிறுவனங்களுக்கு வரும் பார்சல்களில் என்ன உள்ளது என்பதை கேட்க வேண்டும், தேவைப்பட்டால் ஸ்கேன் இயந்திரத்தில் வைத்து உள்ளே இருக்கும் பொருளை தெரிந்து கொள்ளலாம், பார்சல் மீது ஏதேனும் சந்தேகம் இருந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
Tags:    

Similar News