மாற்றுத்திறனாளிகள் சேவை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி
Update: 2023-12-11 05:03 GMT
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் டிசம்பர் 3ஆம் தேதி நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்ட நிலையில் விருதுநகரில் 11ஆம் ஆண்டு சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை கொண்டாடும் விதமாக காமராஜர் சமூக நல அறக்கட்டளை வியாபாரிகள் சங்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகள் சேவையை வலியுறுத்தி விருதுநகர் நகராட்சி அலுவலகம் முன்புள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்த மரியாதை செலுத்தப்பட்ட பின்பு கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியும் நடைபெற்றது. இந்த பேரணியில் விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியைச் சார்ந்த என் எஸ் எஸ் மாணவர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். பேரணியானது நகராட்சி அலுவலகம் முன்பு தொடங்கி மெயின் பஜார், தெப்பக்குளம், தேசபந்து மைதானம் வழியாக விருதுநகர் டிவிஎஸ் நடுநிலைப்பள்ளியில் நிறைவடைந்தது.