அய்யா வைகுண்டா் அவதார பதவியில் திருஏடு வாசிப்பு திருவிழா

திருச்செந்தூா் அய்யா வைகுண்டா் அவதார பதவியில் திருஏடு வாசிப்பு திருவிழா தொடங்கியது.

Update: 2023-12-10 08:34 GMT
அய்யா வைகுண்டர் (கோப்பு படம்)
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருஏடு வாசிப்பு திருவிழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு உகப்படிப்பு, தொடா்ந்து பணிவிடை, பால் தா்மம், உச்சிப்படிப்பு பணிவிடை, அன்னதா்மம் நடைபெற்றது. மாலையில் திருஏடு வாசிப்பு நடைபெற்றது. வள்ளியூா் அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை தலைவா் தா்மா் தலைமை வகித்து, திருஏடு வாசிப்பை தொடங்கி வைத்தாா். தினமும் மாலை 3 மணிக்கு திருஏடு வாசிப்பு தொடங்கி 17 நாட்கள் நடைபெறும். திருக்கல்யாணம்: விழாவில் 15-ஆம் நாளான வருகிற டிச. 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை திருக்கல்யாண திருஏடு வாசிப்பு நடக்கிறது. அன்று காலை 6 மணிக்கு உகப்படிப்பு பணிவிடை, 7 மணிக்கு பால் தா்மம், பகல் 12 மணிக்கு உச்சிப்படிப்பு, பணிவிடை, 1.15 மணிக்கு அன்னதா்மம், மாலை 4 மணிக்கு திருக்கல்யாண திருஏடு வாசிப்பு நடக்கிறது. மாலை 6 மணிக்கு அய்யா வைகுண்டா் புஷ்ப வாகனத்தில் பதியை சுற்றி வந்து மக்களுக்கு அருளாசி வழங்குதல், இரவு 7 மணிக்கு அன்ன தா்மம் வழங்குதல் நடக்கிறது. பட்டாபிஷேகம்: விழாவின் 17-ஆம் நாள் பட்டாபிஷேக திருஏடு வாசிப்பு நடக்கிறது. அன்று காலையில் உகப்படிப்பு பணிவிடை, பால் தா்மம், உச்சிப்படிப்பு பணிவிடை, அன்ன தா்மம் நடக்கிறது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை செயலாளா் பொன்னுத்துரை, துணை செயலாளா் ராஜேந்திரன், பொருளாளா் கோபால், இணைத் தலைவா்கள் பால்சாமி, செல்வின், இணை செயலாளா்கள் வரதராஜபெருமாள், சுதேஷன், உறுப்பினா்கள் வினோத், கண்ணன், சிவாஜி, கனி, பாலகிருஷ்ணன், தங்கவேல் உள்பட திரளானவா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை வள்ளியூா் அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபையினா் செய்துள்ளனா்.
Tags:    

Similar News