ஐயப்ப பக்தர்கள் சிறப்பு பஜனை செய்து வழிபாடு
Update: 2023-12-18 01:20 GMT
ஐயப்பன்
சேலம் மாவட்டம், சங்ககிரி, வி.என்.பாளையம் ஸ்ரீ சக்திமாரியம்மன் கோவில்வளாகத்தில் அருள்மிகு ஐயப்பன் சுவாமி சிறப்பு பஜனைகள் நடைபெற்றது. அருள்மிகு ஐயப்பன் சுவாமியை தரிசனம் செய்ய மாலை அணிந்து விரதமிருந்து வரும் சங்ககிரி, வி.என்.பாளையம் உள்ளிட்ட நகர்பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் குருசாமி சுந்தரம் தலைமையில் சங்ககிரி, வி.என்.பாளையத்தில் உள்ள ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் வளாகத்தில் அருள்மிகு ஐயப்பன், விநாயகர், முருகன் சுவாமிகளின் உவருப்படங்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்து மலர்களால் அலங்கரித்தனர். அதனையடுத்து ஐயப்ப சுவாமி பக்தர்கள் ஐயப்ப சுவாமியின் பல்வேறு பக்தி பாடல்களை பாடி வழிப்பட்டனர். இதில் 200க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள், அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட பல்வேறு பக்தர்கள் சுவாமிகளை வழிப்பட்டனர். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.