குடகனாறு அணையில் பேபி அணை - கோரிக்கை
Update: 2023-12-20 10:35 GMT
குடகனாறு அணை
வேடசந்துார்:குடகனாறு அணையின் ஷட்டர் பகுதி பள்ளத்தில் அமைந்திருப்பதால் 1977ல் உடைப்பு ஏற்பட்டு உயிர் சேதமும் பொருட்செதமும் ஏற்பட்ட நிலையில் தண்ணீர் வீணானது. ஆத்துார், தாடிக்கொம்பு, வேடசந்துார் வழியாக செல்லும் குடகனாற்றின் குறுக்கே அழகாபுரியில் ஐந்துஷட்டர்களுடன் குடகனாறு அணை கட்டப்பட்டது.இந்த நிலையில் அணையில் உள்பகுதியில் அதாவது ஷட்டர்களுக்கு முன்னால் 100 அடி துாரத்தில் வளைவாக ,10 அடி உயரத்தில் 10 அடி அகலத்தில் சுற்றுச்சுவர் (பேபி டேம்) அமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வருகிறது.