மூன்றாவது முறையாக வெற்றி பெற்ற வழக்கறிஞர் சங்க தலைவர்
வழக்கறிஞர் சங்க தேர்தலில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்ற வழக்கறிஞர் ராஜேஸ்வரனுக்கு சக வழக்கறிஞர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.;
Update: 2024-06-29 06:04 GMT
வழக்கறிஞர் சங்க தேர்தலில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்ற வழக்கறிஞர் ராஜேஸ்வரனுக்கு சக வழக்கறிஞர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
திருநெல்வேலி வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் நேற்று (ஜூன் 28) நடைபெற்றது. இதில் சங்க தலைவருக்கு போட்டியிட்ட ராஜேஸ்வரன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஜாகிர் உசேனை விட 493 வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றார். வெற்றியை தொடர்ந்து புதிய தலைவர் ராஜேஸ்வரனுக்கு சக வழக்கறிஞர்கள் வாழ்த்து தெரிவித்தனர். ராஜேஷ்வரன் மூன்றாவது முறையாக வழக்கறிஞர் சங்க தலைவராக பதவி ஏற்பது குறிப்பிடத்தக்கது.