திருப்பத்தூர்: கூலித் தொழிலாளி கிணற்றில் குதித்து தற்கொலை
போதிய வருவாய் இல்லாததால் திருப்பத்தூர் அருகே சிகை அலங்கார தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
Update: 2024-02-11 14:40 GMT
தற்கொலை
திருப்பத்தூர் அடுத்த மடவாளம் பகுதியில் வசித்து வரும் கூலித் தொழிலாளி அன்பு 55 வயது இவர் சிகை அலங்காரம் தொழில் செய்து வருகின்றார். இவருக்கு வருமானம்மின்றி தவித்து வந்ததாக கூறப்படுகிறது.
குடும்பம் நடத்த போதிய வருமானம் இன்றி தவித்து வந்த அன்பு சில தினங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். இவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த விவசாய கிணற்றில் சடலமாக இருப்பதை கண்டு தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.
தகவலின் பேரில் தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து கிராம காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.