வாக்கு சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு
கிருஷ்ணகிரியில் வாக்கு சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்;
By : King 24X7 News (B)
Update: 2024-04-04 12:05 GMT
வாக்கு சாவடியில் ஆய்வு செய்த ஆட்சியர்
கிருஷ்ணகிரி பாராளுமன்ற பொது தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, வேப்பனஹள்ளி அரசு நடுநிலைப்பள்ளி, உருதுபள்ளிகளில் உள்ள வாக்கு சாவடி மையங்களில் அடிப்படை வசதிகளை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் . கே. எம். சரயு இ. ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
உடன் வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட வழங்கல் அலுவலர் . கீதாராணி,சூளகிரி வட்டாட்சியர் சக்திவேல் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.