கடத்தூர் வாரச்சந்தையில் வெற்றிலை விலை சரிவு
கடத்தூர் வெற்றிலை வார சந்தையில் வரத்து அதிகரித்ததை தொடர்ந்து விலை சரிவை சந்தித்தது.
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கடத்தூர் பகுதியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் வெற்றிகளை விற்பனைக்காக வாரச் சந்தை நடைபெறுவது வழக்கம்.நேற்று நடைபெற்ற சந்தையில் கடத்தூர், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், தர்மபுரி, லளிகம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாவட்டத்தில் இருந்தும் ஏராளமான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வெற்றிலையை விற்க மற்றும் வாங்க வந்திருந்தனர்.
மேலும் சந்தையில் 128 கட்டுகளைக் கொண்ட ஒரு வெற்றிலை மூட்டை ஆரம்ப விலை 10,000 முதல் அதிகபட்சமாக 13,000 ஆயிரத்திற்கு விற்பனையானது. வெற்றிலை வரத்து அதிகமானதால், கடந்த வாரத்தை காட்டிலும் 4000 ரூபாய் விலை குறைந்தது. இதில் 30க்கும் மேற்பட்ட வெற்றிலை மூட்டைகள் விற்பனையானது. தற்போது, மழை காரணமாக வெற்றிலை கொடி நன்கு வளர்ந்து வருவதால், வெற்றிலை வரத்து அதிகரித்தால் விலை குறைந்துள்ளது. நேற்று நடந்த சந்தையில், ரூ .3.60 லட்சத்திற்கு வெற்றிலை விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.