கொக்குபாளையம்: அங்கன்வாடி கட்டிடம் கட்ட பூமி பூஜை

அங்கன்வாடி கட்டிடம் கட்ட பூமி பூஜை

Update: 2023-12-17 12:52 GMT

கொக்குபாளையம்: அங்கன்வாடி கட்டிடம் கட்ட பூமி பூஜை

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த அங்கு செட்டிபாளையம் ஊராட்சி கொக்குபாளையம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான குழந்தைகள் பயிலும் அங்கன்வாடி கட்டிடம் பழுதடைந்துள்ளதால் புதிய கட்டிடம் கட்டித் தரக்கோரி ஊராட்சி மன்ற தலைவர் சரசு தெய்வசிகாமணிரிடம் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் மத்திய அரசின் என் ஆர் ஜி எஸ் திட்டத்தின் கீழ் ரூபாய் 12 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை ஊராட்சி மன்ற தலைவர் சரசு தெய்வசிகாமணி தலைமையில் நடைபெற்றது இதில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மணிகண்டன், ஊராட்சி செயலாளர் சங்கர் , வார்டு உறுப்பினர்கள் ஜெயமூர்த்தி மணிகண்டன், குமார், நாகராஜ் மற்றும் சக்திவேல் கம்யூனிஸ்ட் ஒன்றிய நகர செயலாளர் அவர்களும் ஒன்றிய கவுன்சிலர் இளங்கோ, பாஜக தேவா, ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News