எரிவாயு தகன மேடை கட்ட அம்மையகரத்தில் பூமி பூஜை
Update: 2023-12-01 15:56 GMT
பூமி பூஜை
சின்னசேலம் அடுத்த அம்மையகரத்தில் நடந்த பூமிபூஜை நிகழ்ச்சிக்கு ஒன்றிய சேர்மன் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். பி.டி.ஓ., ரவிசங்கர் முன்னிலை வகித்தார். ஊராட்சித் தலைவர் சிவஞானம் வரவேற்றார். நிகழ்ச்சியில், ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் மானிய நிதி திட்டத்தின் கீழ், ரூ.2 கோடி மதிப்பில் எரிவாயு தகன மேடை கட்ட பூமிபூஜை நேற்று நடந்தது.