பாஜகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
பாஜகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில ஈடுபட்டனர்.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-04 08:46 GMT
வெற்றி கொண்டதத்தில் பாஜகவினர்
திண்டுக்கல் : மூன்று மாநில சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதால், சாணார்பட்டி பகுதியில் பாஜகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர். பாரதிய ஜனதா கட்சி ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அபார வெற்றி பெற்றது. இதை முன்னிட்டு பாஜகவினர் உற்சாகமடைந்துள்ளனர்.
பல இடங்களில் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டங்கள் நடந்து வருகின்றன. அதே நேரத்தில் மூன்று மாநிலங்களில் தோற்ற காங்கிரஸ் தெலுங்கானாவில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சியினரும் இனிப்புகளை வழங்கி தெலுங்கனாவில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.