வாட்ஸ்அப் குழுவில் கனிமொழி குறித்து அவதூறு - பாஜக பிரமுகர் கைது

வாட்ஸ்அப் குழுவில் தூத்துக்குடி பாராளுமன்ற திமுக வேட்பாளர் கனிமொழி குறித்து அவதூறாக ஆடியோ பதிவிட்ட பாஜக பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-04-07 11:29 GMT
கைது

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் மாணிக்கவாசபுரம் தெருவைச் சேர்ந்த துரைராஜ் மகன் எட்டுவர்ட் ராஜதுரை (47) . முன்னாள் பேருராட்சி கவுன்சிலரான இவர் முன்னாள் பாஜக சிறுபான்மை அணி பிரிவு நிர்வாகியாக இருந்து வந்தார். தற்போது பாஜகவில் பொறுப்பு இல்லாமல் இருந்து வருகிறார். இவர் கடந்த நவம்பர் மாதம் வாட்ஸ்அப் குழுவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அவதூறாக விமர்ச்சித்ததாக கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் இன்று அவரது வாட்ஸ்அப் குழுவில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி எம்பி குறித்து எட்வர்ட்ராஜதுரை, அவதூறாக ஆடியோ வெளியிட்டுள்ளார். இதுகுறித்து மேல அம்பலச்சேரியைச் சேர்ந்த ஐவர்பாண்டி மகன் தினேஷ் (21) என்பவர் சாத்தான்குளம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் ஏட்டு முருகேசன் வழக்கு பதிந்தார். உதவி ஆய்வாளர் எட்வின் அருள்ராஜ் விசாரணை நடத்தி எட்வர்ட் ராஜதுரையை கைது செய்தார். காவல் ஆய்வாளர் ஏசு ராஜசேகரன் விசாரணை நடத்தி வருகின்றார்.

Tags:    

Similar News