பாஜக பொறுப்பாளர்கள் ஆலோசனைக்கூட்டம்
பாஜக பொறுப்பாளர்கள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தனியார் மண்டபத்தில் பாஜக ஆலோசனைக்கூட்டம் மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமையில் நடைப்பெற்றது.
கூட்டத்திற்க்கு சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் சங்கீதா, இணை ஒருங்கிணைப்பாளர் முனிராஜ், தொகுதி பார்வையாளர் தெய்வமணி முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில துணைத் தலைவர், சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளர் கே.பி.ராமலிங்கம் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் என் மண், என் மக்கள் யாத்திரைக்காக ஜனவரி 7ம் தேதி தர்மபுரிக்கு வருகை தரும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்களை வரவேற்பது குறித்தும், யாத்திரையில் மேற்கொள்ளும் நிகழ்ச்சிகள் குறித்தும், வரும் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்தும் ஆளும் திமுக அரசின் செயல் பாடாத நிர்வாக சீர் கேட்டு திறனை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் குணசேகரன், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட துணைத் தலைவர் சிவா, மண்டல் தலைவர்கள் கனேசன் , பசுபதி, சேட்டு, இராமகிருஷ்ணன், ராஜசேகர் மற்றும் கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.