விவேகானந்தர் மண்டபத்துக்கு 3வது நாளாக படகு போக்குவரத்து தாமதம்

கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபத்துக்கு 3வது நாளாக படகு போக்குவரத்து தாமதம் ஏற்பட்டுள்ளது.

Update: 2024-06-23 15:12 GMT

விவேகானந்தர் மண்டபம்

கன்னியாகுமரி கடலில் கடந்த 2 நாட்களாக கடல் நீர்மட்டம் தாழ்வு ஏற்பட்டு வருகிறது.  பௌர்ணமியை ஒட்டி இன்று மூன்றாம் நாளாக மீண்டும்  கடல் நீர்மட்டம் தாழ்வு நீடித்தது.  இதனால் முக்கடல் சங்கமம் பகுதியில் சங்கிலித் துறை கடற்கரை பகுதியில் சுமார் 50 அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கி காணப்பட்டது.    

  இந்திய பெருங்கடல், அரபிக்கடல்  இரண்டு கடல்களும் சீற்றமாக காணப்பட்டது. இதனால் இந்த கடல் பகுதியில் சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சதலைகள் ஆக்ரோஷமாக எழும்பி வீசின. இதனால் விவேகானந்தர் மண்டபத்துக்கு  இன்று காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து  தொடங்கப்படவில்லை.      

கடல் சகஜ நிலை திரும்பி 11 மணிக்கு பிறகு வழக்கம் போல படகுகள்  இயக்கப்பட்டன. இதனால் சுற்றுலா பயணிகள் இரண்டு மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டு திரும்பினார்.

Tags:    

Similar News