பூதப்பாண்டி பூதலிங்க சுவாமி கோயில் தைத்திருவிழா

பூதப்பாண்டி பூதலிங்க சுவாமி கோயில் தைத்திருவிழாவை முன்னிட்டு நேற்று கொடியேற்றம் நடைபெற்றது.;

Update: 2024-01-17 01:32 GMT
பூதப்பாண்டி கோவில் விழா துவக்கம்
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி சிவகாமி அம்பாள், பூதலிங்க சுவாமி கோவில் தை பிறந்தேர் விழா திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா வரும் 25ஆம் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.   இன்று காலை 8:30 மணிக்கு திருக்கொடி ஏற்றம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி.  ராமகிருஷ்ணன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து இரவு 8 மணிக்கு சுவாமியும், அம்பாளும் பூங்கோவில் வாகனத்தில் பவனி வருதல் நடந்தது.        விழா நாட்களில் தினமும் காலை மாலை சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட சமய சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடக்கின்றன.       ஒன்பதாம் நாள் திருவிழாவான வரும் 24ம் தேதி திருத்தேரில் ஸ்ரீ விநாயகர், சுவாமி, அம்பாளை எழுந்தருள செய்து திருத்தேர் பவனி நடக்கிறது. நிகழ்ச்சியை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைக்க, கலெக்டர் ஸ்ரீதர், எஸ் பி சுந்தரவர்த்தனம் மற்றும் எம் பி விஜய வசந்த் உட்பட ஏராளமான பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.  பத்தாம் திருவிழாவில் காலை 10 மணிக்கு சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு சார்பில் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News