போரூர் ஆதீனம் திருப்பெருந்திரு சாந்தலிங்க மருதஸ்தல அடிகளார் பங்கேற்பு
போரூர் ஆதீனம் திருப்பெருந்திரு சாந்தலிங்க மருதஸ்தல அடிகளார் பங்கேற்றார்.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் திருக்கோணேஸ்வரம் ஆலயத்தில் இடம்பெற்ற சிவராத்திரி நிகழ்வில் போரூர் ஆதீனம் திருப்பெருந்திரு சாந்தலிங்க மருதஸ்தல அடிகளார் மற்றும் பத்மஸ்ரீ டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம் விசேட அழைப்பாளராக கலந்துகொண்டனர்.
நேற்றைய தினம் (06) போரூர் ஆதினம் திருப்பெருந்திரு சாந்தலிங்க மருதஸ்தல அடிகளாரின் தெய்வீக சொற்பொழிவும், சீர்காழி சிவசிதம்பரத்தின் தெய்வீக கானங்களும் நிகழ்த்தப்பட்டன. கிழக்கு ஆளுநரின் ஏற்பாட்டில் கடந்த 02ஆம் திகதி முதல் சிவராத்திரி நிகழ்வுகள் திருக்கோணேஸ்வரம் ஆலயத்தில் தொடர்ச்சியாக தினமும் மாலை வேளையில் நடைபெற்று வருகின்றன.
பெருந்திரளான பக்தர்கள் இந்த நிகழ்வுகளில் கலந்துகொள்கின்றனர். நாளை 08ஆம் திகதியான சிவராத்திரி விரத நாள் வரை இந்த நிகழ்வுகள் ஆலயத்தில் தொடர்ச்சியாக நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.