திருமணமான மறுநாளே உயிரிழந்த மணப்பெண் - எடப்பாடி அருகே சோகம்

Update: 2023-11-19 02:22 GMT

சுதா 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

 சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட மேட்டுத்தெரு அங்காளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சின்னப்பொண்ணு என்பவரின் மகள் சுதாவிற்கும் (27) வெள்ளாண்டிவலசு காந்திநகர் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் (33) என்பவருக்கும் கடந்த நவம்பர் 16ந்தேதி பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு சின்னேரிக்காடு அருகேயுள்ள முருகன் கோவிலில் திருமணம் நடைபெற்றது.மணமகள் சுதாவிற்கு மூச்சு இளைப்பு நோய் இருந்து வந்ததாகவும் அதற்காக தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் மருத்துவம் பார்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் திருமணத்திற்கு பின் செந்தில்குமார் வீட்டில் இருந்த சுதாவிற்கு 17ஆம் தேதி மாலை மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக எடப்பாடி கடைவீதியிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். செல்லும் வழியிலேயே அவர் மயக்கம் அடைந்துள்ளார். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர் ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதனால் பெற்றோர்களும் உறவினர்களும் பெரும் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து சுதாவின் தாயார் சின்னபொண்ணு அளித்த புகாரின் பேரில் எடப்பாடி காவல்துறை ஆய்வாளர் சந்திரலேகா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். திருமணமாகி ஒரே நாளில் புது மணப்பெண் உயிரிழந்ததால் சங்ககிரி வருவாய்க் கோட்டாட்சியர் லோகநாயகியின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News