சேலத்தில் 8 வயது சிறுவன் மீது கொடுர தாக்குதல்

சேலத்தில் 8 வயது சிறுவன் மீது கொடுர தாக்குதல் செய்த தாயின் 2வது கணவர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

Update: 2024-03-03 16:06 GMT

கைது 

சேலம் நரசோதிப்பட்டி பெருமாள் கோயில் அடிவாரம் வீரபாண்டியார் தெருவை சேர்ந்தவர் சந்தியா (28). இவரது முதல் கணவர் சுரேஷ். இவர்களுக்கு சுஜீத் (8) என்ற மகன் உள்ளான். இந்த நிலையில் சுரேஷ், சந்தியாவுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்தனர். பின்னர் சந்தியா, ராம்பிரகாஷ் (32) என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது. கடந்த சில நாட்களாக சுஜீத் மீது ராம்பிரகாஷ் கடும் கோபத்தில் இருந்தார். இந்நிலையில் நேற்று ராம்பிரகாஷ், சுஜீத்தை கரண்டியால் பலமாக தாக்கியுள்ளார். இதில் சுஜீத்துக்கு இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து சந்தியா சூரமங்கலம் போலீசில் புகார் தெரிவித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, ராம்பிரகாஷை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News