நாகர்கோவிலில் தொழிலதிபரை தாக்கி கார் உடைப்பு
நாகர்கோவில் அருகே கொடுக்கவேண்டிய பணத்தை கேட்ட தொழிலதிபரை தாக்கி, அவரது காரை சேதப்படுத்திய தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் உள்ள தெங்கம்புதூர் பகுதி சேர்ந்தவர் டேவிட் லிவிங்ஸ்டன் (39). இவர் பொக்லைன் மற்றும் ஹிட்டாச்சி வைத்து தொழில் செய்தவருகிறார். இவரது பொக்லைன் இயந்திரத்தை சபையார் குளம் பகுதியை சேர்ந்த சர்ணபால் (24) என்பவர் வாடகைக்கு எடுத்து செல்வது வழக்கம். இவ்வாறு வாடகைக்கு எடுத்துச் சென்ற வகையில் சர்ணபால் ரூ 1 லட்சத்து 30 ஆயிரம் கொடுக்க வேண்டி உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த பணத்தை பலமுறை கேட்டும் சர்ணபால் கொடுக்கவில்லை.சம்பவத்தன்று டேவிட் லிவிங்ஸ்டன் சர்ணபால் வீட்டுக்கு சென்று பணம் கேட்டுள்ளார். அப்போது அங்கே இருந்த சர்ணபால் மற்றும் இரண்டு பேர் சேர்ந்து டேவிட் லிவிங்ஸ்டனை சரமாரியாக தாக்கி, அவரது காரை அடித்து உடைத்து, செல்போனை சேதப்படுத்தி அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.இந்த சம்பவம் குறித்து டேவிட் கோட்டாறு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி சர்ணபால் அவரது தந்தை செல்லத்துரை, சகோதரர் ஜான் பால் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து, இதில் சர்ணபால், செல்லத்துரை ஆகியவரை கைது செய்தனர்.