தேர்தல் பாதுகாப்பு பணியில் சிறப்பு காவலர்களாக முன்னாள் படை வீரர்கள் பணிபுரிய அழைப்பு
தேர்தல் பாதுகாப்பு பணியில் சிறப்பு காவலர்களாக முன்னால் படை வீரர்கள் பணிபுரிய விருப்ப கடிதம் வழங்கலாம் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Update: 2024-03-22 11:56 GMT
திருவாரூர் மாவட்டத்தைச் சார்ந்த 65 வயதிற்கு உட்பட்ட நல்ல உடல் நிலையில் உள்ள திடகாத்திரமான அனைத்து முன்னாள் படை வீரர்களும் தேர்தல் பாதுகாப்பு பணியில் பணிபுரிய விருப்ப கடிதம் வழங்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தேர்தல் பாதுகாப்பு பணியில் பணிபுரியும் முன்னாள் படைவீரர்களுக்கு தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்படும் உணவு கட்டணம் மற்றும் மதிப்பூதியம் வழங்கப்படும்.
விருப்பமுள்ள முன்னாள் இளநிலை படை அலுவலர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்கள் திருவாரூர் மாவட்ட ஆட்சியராக அலுவலக இணைப்பு கட்டிட வளாகத்தில் மாவட்ட முன்னாள் படை வீரர் உதவி இயக்குனர் அலுவலகத்தில் விருப்ப கடிதத்தினை அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தகவல் தெரிவித்துள்ளார்.