ராசிபுரத்தில் திமுக சார்பில் திண்ணை பிரச்சார நிகழ்ச்சி
ராசிபுரம் ஒன்றிய திமுக சார்பில் இல்லம் தோறும் ஸ்டாலின் குரல் திண்ணை பிரச்சார நிகழ்ச்சி நடைபெற்றது.;
ராசிபுரம் ஒன்றிய திமுக சார்பில் இல்லம் தோறும் ஸ்டாலின் குரல் திண்ணை பிரச்சார நிகழ்ச்சி நடைபெற்றது.
நாமக்கல் கிழக்கு மாவட்டம் ராசிபுரம் ஒன்றிய திமுக சார்பில் இல்லம் தோறும் ஸ்டாலின் குரல் எனும் திண்ணை பிரச்சார நிகழ்ச்சி மாவட்ட கழக செயலாளரும், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான கே. ஆர். என். ராஜேஷ்குமார் எம்பி அவர்களின் வழிகாட்டுதலோடு ராசிபுரம் அடுத்த மலையாம்பட்டி ஊராட்சி பகுதியில் திண்னை பிரச்சாரம் தொடங்கப்பட்டது.
ராசிபுரம் ஒன்றிய கழக செயலாளரும், ஒன்றிய குழு பெருந்தலைவருமான கே.பி. ஜெகநாதன், இந்த தின்னை பிரச்சாரத்திற்கு தலைமை தாங்கி துண்டு பிரசுரங்கள் விநியோகித்து திமுக கழக ஆட்சியின் சாதனைகள் மற்றும் நடைபெற்ற பல்வேறு நலத்திட்டங்களை பற்றி பொதுமக்களிடம் விளக்கினார்.
இந்நிகழ்வில் மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் கே .பி. சண்முகம், துணை அமைப்பாளர்கள் எஸ். பன்னீர்செல்வம், எல்ஐசி ரவி, மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் பாலமுருகன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சிவசேகரன், மலையாம்பட்டி ஆனந்தன் உள்ளிட்ட கிளைக் கழக செயலாளர், பிரதிநிதிகள், சார்புஅணி நிர்வாகிகள் என திரளாக பலர் கலந்து கொண்டு திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.