வேப்பூரில் கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து
By : King 24X7 News (B)
Update: 2023-11-14 10:03 GMT
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள பொயனப்பாடி - காஞ்சிராங்குளம் சாலையில் காஞ்சிராங்குளம் கிராமத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரது கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக காரில் பயணித்தவர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். பின்னர் காரை ஜேசிபி இயந்திரம் உதவியுடன் மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.