மனைவியை தாக்கிய கணவன், மாமியார் மீது வழக்குப்பதிவு

நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மதிக்காமல் மனைவியை தாக்கிய கணவன் மற்றும் மாமியார் மீது வழக்குப்பதிவு

Update: 2023-12-20 17:46 GMT
குடும்ப வழக்கில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மதிக்காமல், மனைவியை தாக்கிய கணவன், அவரது தாயார் மீது வழக்கு பதிவு கரூர் மாவட்டம், க.பரமத்தி, சாலப்பாளையம், ஜெயந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த முருகேசன் மகள் வான்மதி வயது 26 என்பவருக்கும் கடந்த 4- வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. பின்னர், இருவருக்கும் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக விவாகரத்து கேட்டு கரூர் மகிளா விரைவு நீதிமன்றத்தில் முறையிட்டனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், குடும்ப வன்முறை சட்டத்தின் அடிப்படையில், வான்மதிக்கு குணசேகரன் மாதம் 20 ஆயிரம் ஜீவனாம்சமும், 2 லட்சம் முன்பனமும், திருமணத்தின்போது கொடுத்த நகைகளை திருப்பி வழங்க தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்பை நடைமுறைப்படுத்தாமல் குணசேகரன் இருந்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட வான்மதிக்கு குணசேகரன் வீட்டை திறந்து ஒப்படைக்க அக்டோபர் 25ஆம் தேதி நீதிமன்றம் மீண்டும் தீர்ப்பளித்தது. இதற்காக குணசேகரன் வீட்டிற்கு டிசம்பர் 15ல் வான்மதியும், விஜயாவும் சென்றனர் குணசேகரன்,பாலம்மாள் ஆகியோர் வான்மதி,விஜயாவை தகாத வார்த்தைபேசி, கைகளால் தாக்கினர். காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது தொடர்பாக வான்மதி அளித்த புகாரில், டிசம்பர் 16ல் விசாரணை செய்து, குணசேகரன்,பாலம்மாள் ஆகியோர்மீது நேற்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Tags:    

Similar News