வடபுதுபட்டி பகுதியில் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
ஜெயலலிதாவின் பிறந்தநாள் முன்னிட்டு அதிமுகவின் தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் ஆதரவற்ற இல்லத்தில் கேக் இனிப்பு வழங்கி கொண்டாடினார்.;
By : King 24x7 Angel
Update: 2024-02-24 12:19 GMT
ஆதரவற்ற இல்லத்தில் அதிமுக ஜெயலலிதாவின் பிறந்த நாள் கொண்டாட்டம்
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வடபுதுபட்டி பகுதியில் அன்பு இல்லம் ஆதரவற்றை இல்லம் செயல்பட்டு வருகிறது. .இந்த நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுகவின் தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் முறுக்கு ஓடை ராமர் தலைமையில் ஆதரவற்ற இல்லத்தில் அங்குள்ளவர்களுக்கு கேக் இனிப்பு வழங்கியும் அரிசி பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழங்கியும் உதவி செய்து கொண்டாடினார்கள்.