செங்குணம் ஊராட்சியில் நூறாண்டை கடந்த பள்ளி ஆண்டு விழா

செங்குணம் ஊராட்சியில் நூறாண்டை கடந்த, பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது.

Update: 2024-02-09 06:42 GMT

ஆண்டு விழா

பெரம்பலூர் மாவட்டம், செங்குணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், தலைமை ஆசிரியர் அமுதா தலைமையில் ஆண்டு விழா நடைபெற்றது. செங்குணம் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மதியழகன், செங்குணம் ஊராட்சி கவுன்சிலர் கலையரசன், ஊராட்சி மன்ற தலைவர் சந்திரா கண்ணுச்சாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று வாழ்த்துரை நிகழ்த்தினார்கள்.

விழாவில் தலைமை ஆசிரியர் அமுதா ஆண்டறிக்கையை வாசித்து காண்பித்தார் . ஆண்டறிக்கையில் 1924 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இப்பள்ளி படிப்படியாக 1965 -ல் நடுநிலைப்பள்ளியாகவும், பின்பு 2011 ல் அரசு உயர்நிலைப் பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்ட பின் தற்போது மீண்டும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது , மாணவர்களுக்கு வழங்கப்படும் தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவு திட்டம், மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படும் கல்வி உதவி தொகை உட்பட மாணவர்களுக்கு அரசு வழங்கும் நலத் திட்டங்கள் குறித்து எடுத்து கூறி பள்ளி தொடங்கி 100 வது ஆண்டில் தமிழ்நாடு அரசு உத்திரவு படி,

பள்ளி ஆண்டு விழா நடைப்பெற்றது பெருமையாக உள்ளது இதற்காக அரசுக்கு நன்றியை தெரிவித்து கொண்டுள்ளதாக அறிக்கையை கூறினார் . இதன் அடுத்த மாணவர்களுக்கு பரிசு வழங்கினர்கள் தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. .

முன்னதாக பள்ளி உதவி ஆசிரியர் ஜான்சி ராணி வரவேற்புரை ஆற்றினார். இறுதியாக உதவி ஆசிரியர் அருள்செல்வி நன்றி கூறினார். விழாவில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News