கடற்பசு பாதுகாப்பு மையம்: தஞ்சை பயிற்சி ஆட்சியர் ஆய்வு 

கடற்பசு பாதுகாப்பு மையம் அமையவிருக்கும் இடத்தில் தஞ்சை பயிற்சி ஆட்சியர் ஆய்வு செய்தார்.

Update: 2024-06-22 13:42 GMT

ஆய்வு செய்த பயிற்சி ஆட்சியர்

தஞ்சை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், மாவட்ட வன அலுவலர் அகில் தம்பி ஆகியோர் அறிவுறுத்தலின்படி, தஞ்சை உதவி ஆட்சியர் (பயிற்சி) உத்கர்ஷ்குமார், பேராவூரணி அருகே உள்ள மனோரா கடற்கரையில்,

தமிழ்நாடு அரசு வனத்துறை சார்பில், ரூ.15 கோடி மதிப்பீட்டில் அமையவிருக்கும் கடற்பசு பாதுகாப்பு மையம் அமைய இருக்கும் இடத்தை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார். 

பின்னர், பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ், அதிராம்பட்டினம் கரையூர் பகுதியில் நடப்பட்டுள்ள அலையாத்தி மரக்கன்றுகள், சம்பைப்பட்டினம் காப்புக் காட்டில் நடப்பட்டுள்ள சவுக்கு மரக்கன்றுகள், அடைக்கத்தேவன் கடற்கரை பகுதியில் நடப்பட்ட பனை மரக்கன்றுகள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் கடலுக்குள் விசைப்படகு மூலம் சென்று ஆய்வு செய்தார்.  தொடர்ந்து வனத்துறை பணிகள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார். அப்போது இயற்கை பேரிடரின் போது அலையாத்தி காடுகள் எவ்வாறு பாதிப்பு ஏற்படாமல் தடுக்கிறது எனவும்,

வன உயிரினங்கள், அரியவகை கடல்வாழ் உயிரினங்களை பாதுகாக்க செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்தும் வனத்துறையினர் விளக்கிக் கூறினர்.  இந்த ஆய்வின்போது, பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் சந்திரசேகரன், வனவர் சிவசங்கர் மற்றும் வேட்டைத்தடுப்பு காவலர்கள் உடன் இருந்தனர்

Tags:    

Similar News