சேலம் குழந்தை இயேசு பேராலயத்தில் தேர் பவனி

சேலம் குழந்தை இயேசு பேராலய தேர் பவனியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.;

Update: 2024-01-17 02:16 GMT
சேலம் குழந்தை இயேசு பேராலய பெருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து சேலம் மறை மாவட்ட ஆயர் அருள் செல்வம் ராயப்பன், சேலம் சமூக சேவை சங்க இயக்குனர் டேவிட் ஆகியோர் திருப்பலி நடத்தினர். பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேர்பவனியை சேலம் மறைவட்ட முதன்மை குரு அழகுசெல்வன் தொடங்கி வைத்தார். இந்த தேர் கோயிலில் இருந்து புறப்பட்டு, ஓமலூர் மெயின் ரோடு சாமிநாதபுரம் புனிதமேரி பள்ளி வழியாக கோயிலை வந்தடைந்தது. இந்த பெருவிழாவில் அருட்தந்தையர்கள் கஷ்மீர்ராஜ், கிறிஸ்துராஜ், ஜெரோம், ஜான்கென்னடி, எட்வர்ட்ராஜன், மரியஜோசப் அந்தோணி, ஜான் சத்தியசீலன், டேவிட், பெஞ்சமின் சந்தனராஜ், கோபி இம்மானுவேல் ஆயரின் செயலர் பீட்டர் உள்பட நூற்றுக்கணக்கான பொது மக்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஆலய பங்குதந்தை ஜோசப்லாசர், உதவி பங்கு தந்தை பிரான்சிஸ் சேவியர், பங்கு மக்கள் மற்றும் பங்கு பேரவை துணைத்தலைவர் ஜான்கென்னடி ஆகியோர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News