பல்லடத்தில் நிருபர் குடும்பத்திற்கு காசோலை வழங்கல்
திருப்பூர் மாவட்டம் காமநாயக்கன்பாளையத்தில் தனியார் தொலைக்காட்சி நிருபர் நேசபிரபுவின் பெற்றோர்களிடம் 3லட்சத்திற்கான காசோலையை அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-26 09:33 GMT
காசோலை வழங்கல்
பல்லடம் பகுதியை சேர்ந்த தனியார் தொலைக்காட்சி நிருபர் நேசபிரபு மர்ம நபர்களால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது மருத்துவ சிகிச்சைக்காக ரூ.3 லட்சம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து ரூ.3 லட்சத்திற்கான காசோலையை அவரது குடும்பத்தினரிடம் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார். அருகில் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ், மாவட்ட எஸ்.பி சாமிநாதன் மற்றும் பலர் உள்ளனர்.