சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா - முதல்வர் துவக்கி வைப்பு
சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.;
Update: 2024-01-14 01:37 GMT
சென்னை சங்கமம்
சென்னை தீவுத்திடலில் கலை பண்பாட்டுத்துறை சார்பில், தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலைகளை கொண்டாடும் வகையில் சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அவருடன் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, அமைச்சர்கள் உதயநிதிஸ்டாலின், தங்கம் தென்னரசு, மு.பெ.சாமிநாதன், சேகர்பாபு சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துனை மேயர் மகேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இன்று தொடங்கி ஐந்து நாட்கள் சென்னையில் 18 இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது. இந்த கலை விழாக்களில் 1500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்டுள்ளனர். சென்னையில் இந்த நிகழ்ச்சி 18 இடங்களில் நடைபெறுகிறது தமிழ் மண்ணின் கலைகளை களிப்போடு கொண்டாடும் விதமாக சென்னை சங்கமம் நடைபெறுகிறது