பல்லடத்தில் கறிக்கோழி விலை வீழ்ச்சி; பண்ணையாளர்கள் பாதிப்பு

பல்லடத்தில் கறிக்கோழி விலையின் வீழ்ச்சி அடைந்ததால் கோழிப்பண்ணையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.;

Update: 2023-12-08 12:18 GMT

 பல்லடத்தில் கறிக்கோழி விலையின் வீழ்ச்சி அடைந்ததால் கோழிப்பண்ணையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. இதன் மூலம் தினசரி 10 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்தின் பல் வேறு மாவட்டங்களுக்கும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள் ளிட்ட பிற மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்ப டுகிறது. கறிக்கோழி நுகர்வை பொறுத்து இதன் விற்பனை விலையை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழுவினர் தினசரி நிர்ணயம் செய்து அறிவிக்கின்றனர்.

Advertisement

தற்போது நுகர்வு குறைந்து கறிக்கோழிகள் தேக்கமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் விலையும் வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த மாதம் 9-ந் தேதி கறிக்கோழி 1 கிலோ கொள்முதல் விலை 100 ரூபாயாக இருந்த நிலையில் நேற்று ரூ.76 ஆக விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த விலை வீழ்ச்சியால் பண் ணையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கோழி பண்ணையாளர்களுக்கு உதவிடும் வகையில் தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் சத்துணவு வழங்கப்படும் பொது வாரம் ஒரு முறை சத்துணவுடன் கோழிக்கறி வழங்க அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News