சிவகாசி அருகே சாலை விபத்தில் குழந்தைகள் காயம் - போலீஸ் விசாரணை
சிவகாசி அருகே நடந்த சாலை விபத்தில் குழந்தைகள் காயம். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Update: 2024-03-05 16:27 GMT
விருதுநகர்மாவட்டம் சிவகாசி அருகே பேராபட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் மகேஸ்வரன். இவர் தனது 8 வயது மகளை டூவீலரில் வைத்துக்கொண்டு சிவகாசியில் இருந்து பேராபட்டிக்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது மீனம்பட்டி பஸ் ஸ்டாபில் சாலையை கடக்க முயன்ற சசிகுமார் மகன் விஷ்ணு என்ற 14வயது சிறுவன் மீது மகேஸ்வரன் மோதி கீழே விழுந்துள்ளார். இதில் 14 வயது சிறுவன் விஷ்ணுவும் டூவீலரில் வந்த மகேஸ்வரனின் 8 வயது மகளான தமிழினையும் காயமடைந்தனர். படுகாயம் அடைந்த விஷ்ணு சிவகாசி அரசு மருத்துவமனையில் முதலுதவி செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.