சின்னாளபட்டியில் தாலி சங்கிலியை பறித்து ஓட்டம்: போலீசார் விசாரணை
சின்னாளபட்டியில் தாலி சங்கிலியை பறித்து விட்டு ஓட்டம் பிடித்தனர்.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-28 13:57 GMT
கோப்பு படம்
திண்டுக்கல் மாவட்ட காவல் துறையில் பணிபுரியும் போலீஸ்காரர் மனைவி மற்றும் அவரது இரண்டு குழந்தைகளுடன் இரவு 9 மணி அளவில் சின்னாளபட்டியில் இருந்து வீட்டிற்க்கு இருசக்கர வாகனத்தில் சென்றார்.
அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த வழிப்பறித் திருடன் கலிக்கம்பட்டி அருகே தாலி சங்கிலியை பறித்து விட்டு எத்தி தள்ளிவிட்டுள்ளான். இதில் கீழே விழுந்த போலீஸ்காரர் மனைவிக்கு வலது கை எழும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
அம்பாத்துரை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.