வேடசந்தூர் அருகே சினிமா பாணியில் வெள்ளை பூண்டுகள் கொள்ளை

வேடசந்தூர் அருகே சினிமா பாணியில் வெள்ளை பூண்டுகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-01-18 14:21 GMT

பூண்டை கொள்ளை அடித்தவர்கள்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கரூர் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கருக்காம்பட்டி என்ற இடத்தில் மஹாராஸ்டிர மாநிலத்திலிருந்து, தேனிமாவட்டம் வடுகபட்டிக்கு பூண்டு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு கனகராஜ் என்பவர் லாரியை ஓட்டிசென்றார்.

அப்போது கருக்காம்பட்டி மேம்பாலத்தில் இருந்து பூண்டு ஏற்றி வந்த லாரியில் மூன்று பேர் குதித்து பூண்டு மூட்டைகளை ஒவ்வொன்றாக கீழே தள்ளிவிட பின்புறம் வந்த இருவர் ஆம்னி வேனில் மூட்டைகளை எடுத்து அடுக்கி கொண்டே வந்தனர்.

அப்போது அந்த வழியே பாதயாத்திரை சென்ற பக்தர்கள் ரோந்து காவலர்களுக்கு தகவல் கொடுத்ததின் பேரில் விரைந்து சென்ற ரோந்து காவலர்கள் விட்டல் நாயக்கன்பட்டி என்ற இடத்தில் விரட்டி பிடித்தனர்.

Tags:    

Similar News