ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆட்சியர் ஆய்வு
Update: 2023-11-02 03:50 GMT
ஆட்சியர் ஆய்வு
அரியலூர் மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ஸ்வர்ணா அரியலூர் நகராட்சிக்குட்பட்ட நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட இடங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதில் சிகிச்சை பெறுபவர்களின் விபரம் மருத்துவ உபகரணங்கள், ஊசி, மருந்து, மாத்திரைகளின் இருப்பு விபரம் மற்றும் பொதுமக்களுக்கு அளிக்கபடும் சிகிச்சைகளின் விபரம்குறித்து கேட்டறிந்தார். இதேபோல் கீழப்பழூவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைத்திலும் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் ராஜாஜி நகர் மற்றும் கேகே நகரில் நடைபெற்று வரும் காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை தூய்மை பணிகளை வீடுவீடாகச் சென்று மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். இதில் சுகாதாரபணிகள் துணை இயக்குனர் உள்ளிட்ட அரசுதுறை அதிகாரிகள் உடன் இருந்தனர்