திருநங்கைக்கு தற்காலிக பணி ஆணை வழங்கிய ஆட்சியர்
திருநெல்வேலி மாவட்டத்தில சமூக நலத் துறையின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையத்திற்கான பாதுகாவலராக செயல்பட திருநங்கைக்கு தற்காலிக பணி ஆணை வழங்கப்பட்டது.
Update: 2024-02-28 07:20 GMT
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மாவட்ட சமூக நலத் துறையின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையத்திற்கான பாதுகாவலராக திருநங்கை வந்தனாவுக்கு தற்காலிக பணி ஆணை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் கா. ப. கார்த்திகேயன் கலந்து கொண்டு திருநங்கை வந்தனாவுக்கு தற்காலிக பணி ஆணையை வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் போது அலுவலர்கள் உடன் இருந்தனர்.