செய்யாறில் மாட்டு பொங்கல் தினத்தில் வண்ண வண்ண கோலம்

செய்யாறில் மாட்டு பொங்கல் தினத்தில் வண்ண வண்ண கோலமிட்டு வீடுகள் முன்பு அலங்கரித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

Update: 2024-01-16 10:12 GMT

வண்ண வண்ண கோலங்கள்

 திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரில் மாட்டு பொங்கல் தினத்தில் வீடுகள் முன்பு வண்ண வண்ண கோலமிட்டு வரவேற்கும் விதமாக அலங்கரித்து உள்ளனர். வானியலில் ஆடி மற்றும் தைமாதங்கள் சிறப்பு பெறுகின்றன.சூரியன் தென்திசையிலிருந்து வடதிசை நோக்கி பயணம் செய்யும் காலமே உத்தராயணம் எனப்படும்.

தை, மாசி,பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய ஆறு மாதங்களும் உத்தராயண காலமாகும். தமிழகத்தில் தை பிறந்தால் வழி பிறக்கும் என பழமொழிக்கு ஏற்ப வட இந்தியாவில் மகரசங்கராந்தியாகவும்,தைத்திருநாள் என்றும் அறுவடை திருநாள் எனவும் வழிப்பாடு நடத்தினர்.

மாட்டு பொங்கல் தினத்தில் வீடுகள் முன்பு வண்ண வண்ண கோலமிட்டுள்ளனர்.

Tags:    

Similar News