அதிகாரிகள் மீது புகார் !

பொட்டனேரியில் அனுமதி பெறாமல் கோவில் நிலத்தில் குடிநீர் திட்டப்பணிகள் மேற்கொண்டதற்காக, நடவடிக்கை எடுக்குமாறு அரசு அதிகாரிகள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-12-12 10:16 GMT

பொட்டனேரியில் அனுமதி பெறாமல் கோவில் நிலத்தில் குடிநீர் திட்டப்பணிகள் மேற்கொண்டதற்காக, நடவடிக்கை எடுக்குமாறு அரசு அதிகாரிகள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சேலம் மாவட்டம் , மேட்டூர் அடுத்த மேச்சேரி அருகே பொட்டனேரியில்  மன்னர் காலத்தில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த வரதராஜ பெருமாள் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் கடந்த மேட்டூர் குடிநீர் திட்டத்திற்காக நீர் வள ஆதாரத்துறை மூலமாக பைப்லைன் பதித்தனர். இதற்கு திருக்கோயில் நிர்வாகமோ இந்து சமய அறநிலையத்துறையிடமோ எந்தவித அனுமதியும் பெறவில்லை என தெரிகிறது.

இது குறித்து கடந்த 17.10.2023 அன்று அரசு தலைமைச்செயலர் , அரசு செயலர்கள் , துறைத்தலைவர்கள் , சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோருக்கு திருக்கோயில் சொத்துக்கள் மீட்பு ஆர்வலர் திருத்தொண்டர் சபை தலைவர் அல்லிக்குட்டை இராதாகிருஷ்ணன் புகார் அனுப்பி இருந்தார் . ஆனால் சம்பவம் குறித்து அரசு தரப்பில் புகார் அளிக்காமல் குற்றத்திற்கு உடந்தையாக இருந்து வருவதால் வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் ஆ.இராதாகிருஷ்ணன் மேச்சேரி காவல் ஆய்வாளர் ஆர். வெங்கட்ராமனிடம் இன்று  நேரில் சந்தித்து புகார் அளித்தார் .

Tags:    

Similar News