சாயப்பட்டறைகளால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக புகார்

ஈரோடு மாநகராட்சியில் சாயப்பட்டறைகளால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக மாநகராட்சி கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் புகார் செய்துள்ளனர்.

Update: 2024-06-29 02:29 GMT

ஈரோடு மாநகராட்சியில் சாயப்பட்டறைகளால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக மாநகராட்சி கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் புகார் செய்துள்ளனர்.


ஈரோடு மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் நாகரத்தினம் சுப்பிரமணி தலைமையில் நடைபெற்றது. இதில் பேசிய மாமன்ற உறுப்பினர் கதிர்வேல் வில்லரசம்பட்டியில் செயல்படும் சாய ஆலைகள் சுத்திகரிக்காமல் வெளியேற்றும் சாய கழிவுநீரால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்பட்டு , பல்வேறு வண்ணங்களில் வெளியேறுவதுடன் மக்களும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு வருவதாகவும் , வில்லரசம்பட்டி இன்னொரு சிப்காட்டாக மாறுவதற்குள் நடவடிக்கை என எடுக்க வேண்டும் என கேட்டுக கொண்டனர். இதே போல் மாமன்ற கூட்டத்தில் கொண்டு வரப்படும் தீர்மானங்கள் அந்தந்த பகுதி மாமன்ற உறுப்பினர்களுக்கு தெரிவிப்பதில்லை எனக் கூறி திமுக மாமன்ற உறுப்பினர்கள் மேயரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News