வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியில் முழுமையான ஈடுபாடு - எ.வ.வேலு

தி.மலை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணியை திமுகவினர் முழுமையான ஈடுபாட்டுடன் மேற்கொள்ளவேண்டும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

Update: 2023-10-31 03:21 GMT

அமைச்சர் எ.வ.வேலு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணியில் திருவண்ணாமலை மாவட்ட திமுகவினர் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு விடுபட்ட மற்றும் புதிய வாக்காளர்களை சேர்த்திட வேண்டுமென பொதுப்பணித்துறை அமைச்சரும், திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினருமான எ.வ.வேலு அவர்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில். 01.01.2024 தேதியை தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்திட வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் 27:10.2023 அன்று வெளியிட்டுள்ளது. 27.10.2023 முதல் 09.12.2023 வரை புதிய வாக்காளர்களை சேர்க்கவும் மற்றும் பெயர்கள் நீக்கவும், திருத்தம் செய்யவும் மனு செய்ய கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இது தவிர 04.11.2023 (சனிக்கிழமை), 05.11.2023 (ஞாயிற்றுக்கிழமை), 18.11.2023 (சனிக்கிழமை), 19.11.2023 (ஞாயிற்றுக் கிழமை) ஆகிய நான்கு நாட்களில் நிர்ணயிக்கப்பட்ட மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. இந்நாட்களில் விடுபட்ட வாக்காளர்களும், இடம் மாறிய வாக்காளர்களும் 01.01.2024 அன்று 18 வயது நிரம்பக்கூடிய புதிய வாக்காளர்களும் தங்கள் பெயர்களை சேர்க்க, நீக்க, திருத்தங்கள் மேற்கொள்வதற்கான படிவங்களை பெற்று பூர்த்தி செய்து அந்த படிவங்களை அந்தந்த முகாம்களில் கொடுக்க வேண்டும். 17வயது நிரம்பியவர்களும், உரிய ஆவணங்களோடு விண்ணப்பிக்கலாம். அவர்கள் 18 வயது நிரம்பும்போது வாக்காளர் பட்டியலில் இடம்பெற இந்திய தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்திருக்கிறது, இதன் அடிப்படையில் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி 18 வயது நிறைந்தவர்களின் பெயர்களையும் வாக்காளர் பட்டியலில் இதுவரை இடம் பெறாத பெயர்களையும் புதிதாக குடிபெயர்ந்து உள்ள வாக்காளர்களின் பெயர்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும். தொகுதியிலிருந்து இடம் பெயர்ந்தவர்கள் மற்றும் இறந்தவர்கள் பெயர்களை தற்போதுள்ள பட்டியலில் இருந்து நீக்கவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள மேற்கண்ட அட்டவணையின்படி சிறப்பு முகாம்கள் நடைபெறவிருக்கும் நாட்களில், நமது மாவட்டத்தில் உள்ள திருவண்ணாமலை. கீழ்பென்னாத்தூர், செங்கம் கலசப்பாக்கம், போளூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி தொகுதிக்குட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர். கிளை, வார்டு கழக செயலாளர், நிர்வாகிகள் மற்றும் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் (BLA 2) ஆகியோர் தங்களை முழுமையாக ஈடுபடுத்திட கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு அமைச்சர் எ.வ.வேலு அறிக்கையில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News