சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

அவிநாசியில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2024-07-03 13:26 GMT

அவிநாசியில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

செய்தி: சமூக தணிக்கை என்ற பெயரில் சத்துணவு ஊழியர்களை வஞ்சிக்கும் நடவடிக்கையை கைவிடக் கோரியும், சத்துணவு ஊழியர்கள் இல்லாத மையங்களுக்கு பணியாளர்களை நியமிக்க கோரியும், தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் தமிழக அரசை . கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம் அவிநாசியில்  தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் அவிநாசி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பணி புரியும் சத்துணவு ஊழியர்கள் சுமார் 100 - க்கும் மேற்பட்டோர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சமூக தணிக்கை என்ற பெயரில் சத்துணவு ஊழியர்களை அரசு அலுவலர் அல்லாத நபர்களை வைத்து தணிக்கை செய்வது என்பது ஏற்புடையதல்ல என்றும், எவ்வித முன்னறிவிப்பு இன்றி சமூக தணிக்கை என்ற பெயரில் சத்துணவு ஊழியர்களை வஞ்சிக்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு கைவிடக் கோரியும்,சத்துணவு அமைப்பாளர், சமையலர், உதவியாளர் என மூவரும் இல்லாத மையங்களுக்கு பணியாட்களை நியமிக்காமல் சத்துணவு ஊழியர்களுக்கு பணிச்சுமையை திணிக்கும் தமிழக அரசை கண்டித்தும்,காலியாக உள்ள சத்துணவு ஊழியர் பணியிடங்களை உடனடியாக நிரப்பக் கோரியும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

Tags:    

Similar News