விற்பனைக்காக வைத்திருந்த மது பாட்டில்கள் பறிமுதல்

இண்டூர் அருகே சட்டவிரோதமாக பதுக்கி விற்பனை செய்ய வைத்திருந்து 27 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.

Update: 2024-07-01 09:42 GMT

மது பாட்டில்கள் பறிமுதல் 

தர்மபுரி மாவட்டம் மற்றும் சட்டமன்ற தொகுதி நல்லம்பள்ளி வட்டத்துக்கு உட்பட்ட இண்டூர் அருகே உள்ள நாகர்கூடல் கிராமத்தில் மது பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக இண்டூர் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் இண்டூர் காவல் உதவி ஆய்வாளர் சம்பத் தலைமையிலான காவலர்கள் நாகர் கூடல் கிராமத்துக்கு சென்றனர்.

பின்னர் முருகேசன் வீட்டை சோதனை செய்தபோது அங்கு விற்பனைக்காக மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது. தெரியவந்தது. இதையடுத்து 27 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் தலைமறைவான முருகேசனை தேடி வருகின்றனர்

Tags:    

Similar News