திருப்பூரில் உரிய ஆவணமின்றி வியாபாரி கொண்டு வந்த பணம் பறிமுதல்
திருப்பூரில் உரிய ஆவணமின்றி வியாபாரி கொண்டு வந்த ரூ. 74 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திருப்பூரில் உரிய ஆவணமின்றி வியாபாரி கொண்டு வந்த ரூ.74 ஆயிரத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து, நடவடிக்கை மேற்கொண்டனர். திருப்பூர் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு 64 பறக்கும் படை மற்றும் நிலைக்கண்காணிப்பு குழுவினர் பல்வேறு பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
24 மணி நேரமும் சுழற்சி முறையில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருப்பூர் வடக்கு தொகுதிக்கு உட்பட்ட குளத்துப்பாளையம் சோதனை சாவடி பகுதியில் பறக்கும் படை அதிகாரி பிரம்மநாயகம் தலைமையில் சப்&இன்ஸ்பெக்டர் ராஜு மற்றும் போலீசார் பாபு,
லோகநாதன், கணபதி ஆகியோர் அடங்கிய குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் சென்னையை சேர்ந்த பனியன் வியாபாரி ஆனந்தன் (61) என்பவர் இருந்தார். காரை சோதனை செய்த போது அதில் ரூ.74 ஆயிரம் இருந்தது.
இதற்கான ஆவணங்களை அதிகாரிகள் கேட்ட போது, ஆவணங்கள் இல்லை. இதனைத்தொடர்ந்து ரூ.74 ஆயிரத்து பறிமுதல் செய்து வடக்கு தாசில்தார் மகேஸ்வரனிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.