திருத்துவபுரத்தில் முதியவர்களிடம் நலம் விசாரித்த காங். வேட்பாளர்
திருத்துவபுரம் பகுதியில் முதியவர்களை சந்தித்து நலம் விசாரித்து ஓட்டு சேகரித்த காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பர்ட்.;
By : King 24X7 News (B)
Update: 2024-04-07 14:02 GMT
நலம் விசாரித்த காங்.வேட்பாளர்
விளவங்கோடு சட்டமன்ற தொகுதி காங்., வேட்பாளர் தாரகை கத்பர்ட் களியக்காவிளை, மருதங்கோடு பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். தாரகை கத்பர்ட் தொகு தியின் பல்வேறு பகுதிகளில் வாகன பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
களியக்காவிளை, பனங்காலை, மஞ்சவிளை, மருதங்கோடு, கக்கோட்டுவிளை, உண்டனகுழி, திருத்துவபுரம், படந்தாலு மூடு, இடைக்கோடு பகுதிகளில் வாகன பிரசாரம் மேற்கொண்டு ஆதரவு திரட்டினார். பிரசாரத்தின் போது முதியவர்கள் மற்றும் பெண்கள் நிற்கும் பகுதிகளில், வேட்பாளர் வாகனத்தில் இருந்து கீழே இறங்கி, நலம் விசாரித்து வாக்குகள் கேட்டார்.
வேட் பாளருடன் கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர்.