பெரம்பலூரில் காங்கிரஸ் கட்சி ஆலோசனை கூட்டம்
பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி மற்றும் சட்டமன்ற தொகுதி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள தனியார் அரங்கில் பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தலைவர் சுரேஷ், தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள் திருச்சி மாநகர மேயர் மற்றும் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் சுஜாதா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்
கூட்டத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்றது, இதில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்கு காங்கிரஸ் கட்சி வேட்பாளரை நிறுத்துவது என்றும், மேலும் ஒவ்வொரு கிளை சார்பாகவும் பூத் கமிட்டி அமைப்பது மற்றும் அதற்கான நிர்வாகிகள் பணிகள் குறித்து ஆலோசனை மற்றும் நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் நடைபெற்றது .
இக்கூட்டத்தில் பெரம்பலூர் நகரத் தலைவர், இப்ராகிம், வழக்கறிஞர் பிரிவு ரஞ்சித் குமார், மாவட்டத் துணைத் தலைவர்கள் . ஆசைத்தம்பி, அருணாச்சலம், பன்னீர்செல்வம், நல்லுசாமி செந்தில்குமார், கந்தசாமி, மாவட்ட பொதுச் செயலாளர் மோகன், மாவட்ட பொருளாளர் மனோகரன் , வட்டார தலைவர்கள் வேப்பந்தட்டை கிழக்கு சையத் பக்தோதின், மேற்கு, சின்னசாமி, ஆலத்துர் பாக்யராஜ், வேப்பூர் வடக்கு வட்டாரத் தலைவர் , விஜயகுமார், தெற்கு செந்தமிழ்ச்செல்வன், மகளிர் அணி துணை இணைச் செயலாளர் இந்திராணி, மாவட்ட செய்தி தொடர்பாளர் பாலமுருகன் , அரும்பாவூர் நகர தலைவர் தேவராஜ். பெரம்பலூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பால்ராஜ், மாவட்ட ஊடகப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.