ஸ்டேட் பேங்க் முன்பு காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
குமாரபாளையம் ஸ்டேட் பேங்க் முன்பு காங்கிரஸ் சார்பில்கண்டன ஆர்ப்பாட்டம்
Update: 2024-03-08 07:10 GMT
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தேர்தல் பத்திர விவகாரத்தில் பிரதமர் மோடி, மோசடி செய்ததாகவும், அதற்கு ஸ்டேட் வங்கி துணை போவதாகவும் கூறப்பட்டதால், குமாரபாளையம் ஸ்டேட் வங்கி முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் செல்வகுமார், நகர தலைவர் ஜானகிராமன் தலைமை வகித்தனர். ஸ்டேட் வங்கிக்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. மாவட்ட தலைவர் செல்வகுமார், இந்த விவகாரம் குறித்து விளக்கி பேசினார். மாவட்ட செயலர்கள் சக்திவேல், பொதுக்குழு உறுப்பினர் சாமிநாதன், நகர செயலர் தாமோதரன், நகர துணை தலைவர் சிவகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.