செஞ்சி காசிவிஸ்வநாதர் கோவிலில் பிரதோஷ நாயகர் சிலை பிரதிஷ்டை

சிவனடியார்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டது

Update: 2023-12-11 07:15 GMT
செஞ்சி காசிவிஸ்வநாதர் கோவிலில் பிரதோஷ நாயகர் சிலை பிரதிஷ்டை
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சிறுகடம்பூரில் உள்ள ஸ்ரீவிசாலாட்சி உடனுறை காசிவிஸ்வநாதர் கோவிலில் புதிதாக பார்வதி சமேத பிரதோஷநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஐம்பொன் சிலையான பார்வதி சமேத பிரதோஷ நாயகர் சிலை ஊர்வலமாக கோவில் வளாகத்துக்கு எடுத்து வரப்பட்டது. அங்கு சிவனடியார்களால் கலசாபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மேளதாளம் முழங்க கோவில் கருவரைக்கு எடுத்து சென்று, மூலவர் அருகே வைக்கப்பட்டு. சிறப்பு வழிபாடு மற்றும் அலங்காரம், அர்ச்சனை நடந்து, மகா தீபாரா தனை நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பிரதோஷ நாயகரை வழிபாடு செய்தனர். இதற்கான ஏற் பாடுகளை செஞ்சி ஸ்ரீவிசாலாட்சி உடனுறை ஸ்ரீகாசிவிஸ்வநாதர் அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News